விஜயகாந்த் பிறந்தநாள் விழாகல்வி உபகரணங்கள் வழங்கல்

விருத்தாசலம்: விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தே.மு.தி.க., சார்பில் கோணாங்குப்பம் காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் செம்பை தலைமை தாங்கி, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பிரியாணி வழங்கினார்.

தொடர்ந்து, எம்.பட்டி, பட்டி குடிக்காடு, பரவளூர், முகுந்தநல்லுார், படுகளாநத்தம், ராசாபாளையம் கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மங்கலம்பேட்டை பேரூர் செயலாளர் முத்து, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், முல்லைநாதன், பாலகிருஷ்ணன், நீலகண்டன், சரண்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் தே.மு.தி.க., வினர் கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்பு, பெண்களுக்கு புடவைகள் வழங்கினர்.

Advertisement