கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி விரைவு தரிசனம் செய்ய வழிமுறை குறித்து ஆய்வு: அமைச்சர் ரமேஷ்
திருவண்ணாமலை: ஆவணி பவுர்ணமி கிரிவலம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று, நாளை நடக்கிறது. இந்நிலையில் அரசு விடுமுறை நாளான நேற்று, காலை முதலே, அக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து அங்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்.
பொது தரிசன வரிசையில், பக்தர்களின் நிலையை பார்வையிட்டார். அப்போது பக்தர்கள், 'கிரிவல நாட்களில் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வருகிறோம். அதுபோன்ற நாட்களில் விரைவு தரிசனம் செய்ய முடியவில்லை. எளிதில் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, கோவில் அலுவலகத்தில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், அமைச்சர் ரமேஷ் அளித்த பேட்டி: கோவிலில் பக்தர்கள், முக்கியமாக கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் விரைவாக தரிசனம் செய்ய, வழிமுறை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உள்ளூர் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சிலைகளை புகைப்படம் எடுப்பது, கோவிலுக்குள், 'ரீல்ஸ்', வீடியோ எடுப்பது போன்ற செயல்களை தடுக்கவும், வி.ஐ.பி.,க்கள், அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் கோவிலுக்கு வரும்போது, அவர்களை பக்தர்கள், 'செல்பி', வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதை தவிர்க்கவும், கோவிலுக்குள், மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்படுகிறது.
பக்தர்கள் அமைதியான முறையில் வழிபடுவதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கில், வரும், 1 முதல், அருணாசலேஸ்வரர் உள்பட, 50-க்கும் மேற்பட்ட முதுநிலை கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hi Ramesh,
Could you please look into the reported irregularities related to the paid darshan tem at Thiruparankundram Temple? There appears to be insufficient consideration for pregnant women and people with disabilities.
I also request that special provisions be introduced for parents accompanying children under two years of age, similar to the arrangements at Meenakshi Amman Temple.
Please consider this matter and take the necessary action.
Hi Ramesh,
Could you please look into the reported irregularities related to the paid darshan tem at Thiruparankundram Temple? There appears to be insufficient consideration for pregnant women and people with disabilities.
I also request that special provisions be introduced for parents accompanying children under two years of age, similar to the arrangements at Meenakshi Amman Temple.
Please consider this matter and take the necessary action.
அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் . நல்லது ஒரு நாள் கண்டிப்பாக நடக்கும். அது தற்போது நடந்து வருகிறது . இராமேஸ்வரம் கோவிலில் நடக்கும் முறைகேடுகளையும் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்ன ஆய்வு செய்தாலும், முடிவில் பழைய கிழவி, கதவை திறடி கதைதான். ஒன்றும் நடக்கப்போவதில்லை. முதலில் அங்குள்ள uniform அணிந்துள்ள சிப்பந்திகளை முற்றிலும் நீக்கவேண்டும். பூஜாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும். அவர்கள் செய்யும் அட்டூழியம் இருக்கிறதே.... அந்த அண்ணாமலையாருக்கே பொறுக்காது.
கர்ப்பிணிகள் மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் குறிப்பிட்ட நேரம் என அறிவுப்பு செய்து சலுகை அளிக்கலாம். உதாரணமாக , காலை ஒன்பது முதல் பத்து மணி வரையிலும் இவர்களுக்கு மட்டும் என்று ஒதுக்கலாம் அந்த சலுகை நேரத்தில் . அவர்கள் யாரும் இல்லையென்றால் மற்ற பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கலாம்.
மந்திரி காலணி அணிந்து ஆய்வு செய்திருப்பார் என் நரம்புகிறேன் !
அறநிலையத்துறையின் கையில் சுமார் அறுபதாண்டுகளுக்கும் மேலாகக் கோவில்கள் .... இந்த சாதாரண பிரச்னைக்குத் தீர்வில்லை இன்றுவரை ..... அதுசரி .... மறநிலையத்துறைக்குப் கோவில் நிலம் மற்றும் பணம்தானே முக்கியம் ....
இதில் ஆய்வு செய்ய என்ன இருக்கிறது ஏற்கனவே உள்ள விஐபி வழியில் விட வேண்டியது தானே குறிப்பாக காசு வாங்காமல் விடவேண்டும்மேலும்
-
ஒலிம்பிக்கில் முன்னேற்றம் தேவை * பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
கொழும்பில் கோட்டைவிட்டது இந்தியா * 'டிரா' செய்து ஏமாற்றம்
-
இந்தியா-உருகுவே மோதல் * நட்பு கால்பந்து போட்டியில்
-
கார், பைக் முகப்பு விளக்கின் பிரகாசத்தை குறைக்க நடவடிக்கை
-
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள்; தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்
-
ரயில் வழித்தடத்தின் கீழ் சுரங்கப்பாதை 8 மணி நேரத்தில் உருவாக்கி சாதனை