இந்தியா-உருகுவே மோதல் * நட்பு கால்பந்து போட்டியில்
புதுடில்லி: நட்பு கால்பந்து போட்டியில் இந்தியா, உருகுவே அணிகள் மோத உள்ளன.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் ஒவ்வொரு அணியும் வரும் செப். 21 முதல் அக். 6 வரை நான்கு நட்பு போட்டிகளில் பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது.
இதன் படி உலகத் தரவரிசையில் 138 வது இடத்தில் உள்ள இந்திய அணி, தரவரிசையில் முன்னிலையில் உள்ள அணிகளுக்கு எதிராக மோத முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, செப். 26ல் இந்திய அணி, 44 வது இடத்தில் உள்ள பனாமாவுடன் மோத உள்ளது. இப்போட்டி பெங்களூரு கன்டீவ்ரா மைதானத்தில் நடக்கும்.
அடுத்து அக். 3ல் கொல்கட்டாவின் விவேகானந்தா மைதானத்தில் நடக்க உள்ள போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் ஆன உலகின் 'நம்பர்-5', பிரேசிலுடன் (1958, 1962, 1970, 1994, 2002), இந்தியா மோத உள்ளது. அடுத்த மூன்று நாளில், கொல்கட்டாவில் நடக்கும் போட்டியில், இந்திய அணி (அக். 6), உலகின் 'நம்பர்-20' ஆக உள்ள, உருகுவேயை எதிர்த்து களமிறங்குகிறது.
உலக கோப்பை தொடரில் இரு முறை சாம்பியன் (1930, 1950) ஆன உருகுவே, மூன்று முறை அரையிறுதிக்கு (1954, 1970, 2010) தகுதி பெற்றது.
உருகுவே அணி பயிற்சியாளராக டீகோ போர்லன் உள்ளார். இவர் ஐ.எஸ்.எல்., தொடரில் 2016ல் மும்பை அணிக்காக விளையாடினார்.
தவிர, நியூசிலாந்துக்கு ('நம்பர் 80') எதிராக இரண்டு போட்டியில் இந்தியா நவ. 13, 15) விளையாட உள்ளது.