ஒலிம்பிக்கில் முன்னேற்றம் தேவை * பிரதமர் மோடி வலியுறுத்தல்
புதுடில்லி: '' ஒலிம்பிக்கில் அதிக போட்டிகளில் பங்கேற்கும் வகையில் முன்னேற்றம் அடைய வேண்டும்,'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளை தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக 'கேலோ இந்தியா' உரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இணைந்திருந்த விளையாட்டு நட்சத்திரங்கள், மாணவர்கள், உள்ளிட்டோரிடம் பிரதமர் மோடி, 'வீடியோ கான்பெரன்சிங்' வழியில் பேசினார். விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் இதில் பங்கேற்றார்.
அப்போது பிரதமர் மோடி பேசியது:
விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வது மட்டுமல்ல. தேசத்தை சிறப்பாக கட்டமைக்கும் முயற்சியின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக உள்ளது.
ஒலிம்பிக்கில் பல்வேறு வித்தியாசமான விளையாட்டுகள் இடம் பெறுகின்றன. இதில் பாதியளவு விளையாட்டுகளில் கூட நாம் பங்கேற்பது இல்லை. அதாவது பெரும்பாலான பதக்கங்களுக்கான போட்டிகளில் களமிறங்குவதே இல்லை. இது தான் கசப்பான உண்மை.
கால காலமாக இந்நிலை தொடர்கிறது. கடந்த 2012ல் 13 போட்டியில் மட்டும் தான் பங்கேற்றோம். 20க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் போட்டியிடவே இல்லை.
2024ல் 32ல் 16 போட்டியில் மட்டும் இந்தியா களமிறங்கியது. இதில் சில விளையாட்டுகள் குறித்து இந்தியாவில் பலருக்கு தெரிவதே இல்லை. மற்ற நாடுகள் பதக்கம் வெல்லும் நிலையில், அதில் நாம் போட்டியிடுவதே கிடையாது.
இந்தியாவில் நீண்ட கடற்கரைப் பகுதிகள் உள்ளன. இயற்கையாகவே மலைப்பகுதிகளும் அதிகம் உள்ளன. நீர் சார்ந்த விளையாட்டுகள், பனிச்சறுக்கு போன்ற குளிர்கால போட்டிகள் வரை என, அனைத்திற்கும் சாதகமான புவியியல் அமைப்பு, தேவையான மக்கள் தொகை உள்ளன.
இருப்பினும், 'சர்பிங்' (அலைச்சறுக்கு), ஸ்போர்ட் கிளிம்பிங்கில் (சுவற்றில் ஏறுதல்) யாரும் பங்கேற்பதே கிடையாது. ஒலிம்பிக்கில் பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க, இதுபோன்ற பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான வழி முறைகளை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய விளையாட்டு தினம்
ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்த ஆக. 29 (நாளை) தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி கூறுகையில்,'' கடந்த 100 ஆண்டுக்கு முன், நியூசிலாந்து சென்ற இந்திய ஹாக்கி அணியில் மேஜர் தயான் சந்த் இடம் பெற்றிருந்தார். இரு நாடுகள் இடையிலான விளையாட்டு உறவின் நுாற்றாண்டு விழாவுக்கான அடித்தளமாக இத்தொடர் அமைந்தது,'' என்றார்.
அனைத்தும் மாறும்
பிரதமர் மோடி கூறுகையில்,'' விளையாட்டு வீரர், வீராங்கனை சாதிக்கும் போது, அது அவருடைய வெற்றி மட்டுமல்ல, அவரது குடும்பம், படித்த பள்ளி, கல்லுாரி, மாவட்டம் என அனைத்திற்கும் பெருமை சேர்க்கிறது. அவர் எங்கிருந்து வருகிறார் என உலகம் தெரிந்து கொள்கிறது. அந்த இடத்தை பற்றிய மக்களின் கண்ணோட்டம் முற்றிலும் மாறி விடுகிறது.
இரு கைகள் இல்லாத ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை), அவனி லெஹரா (பாரா துப்பாக்கிசுடுதல்), ஜண்டு குமார் ('பவர் லிப்டர்'), சுமித் அன்டில் (பாரா ஈட்டி எறிதல்) என அனைவரும் எனக்கு ஊக்கம் தருகின்றனர்,'' என்றார்.
மேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்