100 இந்தியர்கள் இருக்கும் இடம் தெரிந்தது

5

காத்மாண்டு: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உள்ள 100 இந்தியர்கள் , 25 சீனர்களின் இருப்பிடத்தை மீட்புக்குழுவினர் கண்டறிந்து உள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.


நேபாளத்தில் நேற்று பெய்த கனமழை மற்றும் திபெத் எல்லையையொட்டிய பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒட்டுமொத்த நாடும் பேரழிவுக்கு ஆளாகியுள்ளது. இந்தப் பேரழிவில் நேபாளத்தினர் மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிக்கியுள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கை சரியாக வெளியிடவில்லை. தமிழர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் கூறியதாவது; வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கி 300 இந்தியர்கள் உள்பட சுமார் 800 பேரைக் காணவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையேநேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உள்ள 100 இந்தியர்கள் , 25 சீனர்களின் இருப்பிடத்தை மீட்புக்குழுவினர் கண்டறிந்து உள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

Advertisement