டாஸ்மாக் கடைகள் அடைப்புமது பிரியர்கள் -'அப்செட்'

பந்தலுார்: கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் நேற்று திறக்கப்பட்ட மதுகடைகள் அரை மணி நேரத்தில் மூடப்பட்டதால் மது பிரியர்கள் 'அப்செட்' ஆகினர்.

கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில், மனிதர்களை தாக்கி வரும் புலியை பிடிக்க வலியுறுத்தி, 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இது தொடர்பாக நேற்று மாநில எல்லை பகுதிகளில் போராட்டங்கள் நடந்த நிலையில் மதியம், 12:00 மணிக்கு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை, உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனால், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில், 14 கடைகள் நேற்று ஒரு நாள் மூடப்பட்டன. அரை மணி நேரம் மட்டுமே செயல்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மது பிரியர்கள் 'அப்செட்' அடைந்தனர்.

Advertisement