பட்டதாரி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு: 2 அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சி: பட்டதாரி ஆசிரியரிடம், 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றிய சந்திர சேகரன், 65, தேவதாஸ், 61, ஆகிய இருவருக்கும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, பாலகிருஷ்ணன்பட்டி அரசு ஆதிதிராவிடர் உயர் நிலைப்பள்ளியில் பட்ட தாரி ஆசிரியராக பணி யாற்றியவர் கண்ணன்.
இவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்யாமல் இருக்க, திருச்சி மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், அலுவலர் தேவதாஸ் ஆகியோர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்த புகாரில், கடந்த, 10.08.2009 அன்று லஞ்சப்பணத்தை வாங்கிய அலுவலர்கள் சந்திர சேகரன், தேவதாஸ் ஆகியோர், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து, நேற்று நீதிபதி புவியரசு தீர்ப்புஅளித்தார்.
அதில், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் சந்திரசேகரன், தேவதாஸ் ஆகிய இருவருக்கும், 3 ஆண்டுகள் சிறை தண் டனையும், 20,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
உத்திரபிரதேசத்தில் ஒரு நீதிபதி 6 மாதத்தில் 22 வழக்குகளை விசாரித்து 22தூக்குத்தண்டனை கொடுத்ததாக சேதிவந்தது .இங்கு ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்புசொல்லவே 17 வருடங்களாகின்றன .நீதித்துறையில் எண்ணதான் நடக்கின்றது .காவல்துறை வழக்கை விசாரித்து உடனுக்குடன் குற்றபத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் .ஒரு வழக்கில் காவல்துறை குறைந்தது 6 மாதத்தில் குடற்ப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையென்றால் அந்த வழக்கை வேறு ஒரு துறை அதிகாரியால் விசாரிக்கும் நடைமுறைவேண்டும் .
அப்போதுதான் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் லஞ்சம் தவிர்க்கப்படும் .
பரவாயில்லையே. ரொம்ப சீக்கிரமா தீர்ப்பு கொடுத்துட்டீங்க. உண்மையிலேயே, நீதிபதியை பாராட்ட வேண்டிய விஷயம்.. நாடு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மிகச் சிறந்த உதாரணம்.
இதுகுறித்த புகாரில், கடந்த, 10.08.2009 அன்று லஞ்சப்பணத்தை வாங்கிய அலுவலர்கள் சந்திர சேகரன், தேவதாஸ் ஆகியோர், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து, நேற்று நீதிபதி புவியரசு தீர்ப்புஅளித்தார். இப்போது தெரிந்து கொள்ளுங்கள். இந்திய மக்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்றால், இந்த நீதித்துறை எவ்வளவு வேகமாகவும் சிறப்பாகவும் செயல்படுகிறது என்பதை இங்கேயே தெரிந்து கொள்ளுங்கள்.
2006 ஆம் ஆண்டு லஞ்ச கேசுக்கு 2026ல் தீர்ப்பு, அதுவும் பள்ளி ஆசிரியர் சம்பந்தப்பட்ட வழக்கு.. இதனால் மாணவர்களின் மனநிலையில் சட்டம், கோர்ட் பற்றிய தவறான அபிப்ராயம் ஏற்ப்பட வாய்ப்புள்ளது..
இந்த கேஸை 17 வருஷம் தள்ளி வெக்கிறதுக்கு எத்தனை பேர் எவ்ளோ லஞ்சம் வாங்குனாங்களோ மை லார்ட்
லஞ்சம் குடுத்தவன் வாங்குனவன் மூணு பெரும் களவணிகள்.
இவர்கள் இருவரும் யார் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக அடுத்த மூன்று ஆண்டுகளை கழிக்கலாம் வாழ்த்துக்கள்
அப்படி லஞ்சம் வாங்கி வாழ வேண்டுமா? வெட்கமாக இல்லையா
திராவிஷ அழுக்குகள். தனியார் நிறுவனங்களை விட அரசு ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் சலுகைகள் அவர்களின் கல்வித் தகுதி திறமை தாண்டியும் வழங்கப்படுகிறது. அதற்கும் மேல் லஞ்சம் வாங்குகிறார்கள். உண்மையில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்தல் மற்றும் கையும்களவுமாக லஞ்ச வழக்குகளில் பிடிபடும் நபர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து பின்னர் முழு விசாரணை ஆரம்பிக்க வேண்டும்.
இதுபோல வழக்குகளை இழுத்து அடித்து காலம் கடத்தி வேலையில் மறுபடியும் ஒட்டிக்கொண்டு விடலாம் என்ற துணிச்சலில் தான் மீண்டும் மீண்டும் அதிகாரிகள் லஞ்சத்தை வாங்கி குவிக்கிறார்கள். இதற்கே 17 ஆண்டுகள் ஆகிவிட்டது இதுக்கு மேல மேல்முறையீடு எல்லாம் இருக்கிறது. சட்டத்தில் இப்படி எல்லாம் ஓட்டைகள் இருக்கிறதுனால லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ஒருநாளும் திருந்த போவதில்லை.
ஓய்வு பெற்று இருப்பார்களே 16 வருடத்தில் மிக விரைவாக நீதி
2009 வாங்கிய லஞ்சம். 2026 தீர்ப்பு.மேலும்
-
23,000 ரூபாய்க்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலம்; இப்படியும் நடக்கிறது நூதன மோசடி
-
உஸ்பெகிஸ்தானில் இந்திய தேசியக்கொடி நிறத்தில் மிளிர்ந்த பிரமாண்ட கட்டடம்; பிரதமர் மோடியை வரவேற்க ஏற்பாடு
-
ஒட்டம்பட்டு பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
-
கரூர் மேயர் வார்டில் குப்பை குவியல் அபராதம் விதிக்க மக்கள் கோரிக்கை
-
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 2,234 பேர் பங்கேற்பு
-
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு