உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பயணம்; புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

7



- நமது நிருபர் -




பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக புறப்பட்டு சென்றார்.

உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்ஜியோயேவ் அழைப்பின் பேரில், அந்நாட்டு பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக இன்று (ஆகஸ்ட் 29) புறப்பட்டு சென்றார்; அந்நாட்டு அதிபருடன் பிரதமர் மோடி இரு தரப்பு உறவு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல், எரிசக்தி, கல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கிறார்.

தாஷ்கண்ட்டில் உள்ள சாஸ்திரி நினைவகத்திற்கும், தாஷ்கண்ட் பல்கலையில் உள்ள மஹாத்மா காந்தி மையத்திற்கும் பிரதமர் செல்ல உள்ளார். ஆக.,31ல் கிரிஸ்கிஸ்தானின் பிஸ்கெக் நகர் செல்கிறார்.

அந்நாட்டு அதிபர் ஜபரோவ் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26வது மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். செப்டம்பர் 1ம் தேதி பயணத்தை முடித்துக் கொண்டு டில்லி திரும்ப உள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அடுத்த சில நாட்களில், உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானில் இருப்பேன். இந்தியா-உஸ்பெகிஸ்தான் நட்புறவை மேம்படுத்துவதற்காக, தாஷ்கண்டில் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் இருதரப்புப் பேச்சு நடத்த உள்ளேன்.

பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


சிறப்பு வீடியோ!

பிரதமர் மோடி 2 நாடுகளுக்கு 4 நாள் பயணம்; புறப்படும் முன் சொன்ன முக்கிய மெசேஜ் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement