மாணவர் திறமையைக் கண்டறியுங்கள்; தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுடில்லி: மாணவர்களின் திறமையைக் கண்டறியுங்கள் என தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி இன்று (செப் 05) தனது இல்லத்தில், தேசிய ஆசிரியர் விருதுகளைப் பெற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: குழந்தைகளின் ஸ்கிரீன் டைம் போதையைக் குறைக்க வெளி விளையாட்டு மற்றும் படைப்பாற்றல் பயிற்சிகள் அவசியம்; போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து குழந்தை பருவத்தைப் பாதுகாக்க ஆசிரியர்கள் பாடத்திட்டங்களை தாண்டி வழிகாட்ட வேண்டும்.
போதைப்பழக்கம்
மாணவர்களின் திறமையை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும். ஒரு குழந்தை விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கினால், போதை பழக்கத்தில் சிக்கி இருந்தால் படிப்படியாக அந்தப் போதையிலிருந்து விடுபடக்கூடும். குழந்தைகளை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் எவ்வளவு அதிகமாக ஈடுபடுத்துகிறோமோ, அவ்வளவுக்கு அத்தகைய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை வடிவமைப்பதை நாம் ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
உன்னிப்பாகக் கவனியுங்கள்
சில முக்கிய நகரங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் தலைதூக்கி உள்ள போதைப்பொருள் விவகாரத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலும் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது; சில சமயங்களில் எவ்வித விளக்கமும் இன்றி வெறும் விதிமுறைகள் மட்டுமே திணிக்கப்படுகின்றன. இது தொடர்பான விளைவுகள் மற்றும் அச்சங்கள் குறித்து இன்றைய ஆசிரியர்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; அத்துடன், இத்தகைய நடவடிக்கைகள் குழந்தைகளிடம் ஏதேனும் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துகின்றனவா என்பதையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
குழந்தைப் பருவம்
நான் உங்கள் அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்தக் கல்விச் சமூகத்திற்கும் ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன்: குழந்தைகளின் வாழ்க்கையோடு உண்மையாக இணைய நாம் பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். குழந்தைப் பருவத்தை நாம் மடிய விடக்கூடாது; அதைப் பாதுகாப்பதில் ஆசிரியர்களுக்கே மிகச் சிறந்த பங்கு உள்ளது. அக்குழந்தையின் குழந்தைப் பருவம் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்வது ஒரு ஆசிரியரின் கடமையாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நான் சமீபத்தில் படித்தேன்... புது கண்டுபிடிப்புகளுக்கு காரணமான விஞ்ஞானிகளுக்கு கட் அவுட் வைத்து கௌரமளிக்கும் சீனா என்று. சினிமா மோகத்தில் அந்த துறையை சார்ந்தவர்களுக்கு உயர் பதவியில் அமர வைக்கும் மக்கள் தேர்தல் மற்றும் கட் அவுட் கலாச்சரம் மாற வேண்டும்.
இந்த மாதிரி தீர்க்கமாக பல மாணவர்களின் பெற்றோர்களே சிந்திப்பதில்லை. ஆசிரியர்களுக்கு நேரமே இல்லை. ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு நல்ல எண்ணம் மற்றும் மாணவர் எதிர்கால நலன் குறித்து பேசுவது ஆச்சரியம். இளைய தலைமுறை பிரதமரிடம் இருந்து நல்லது கற்றுக்கொள்ள வேண்டும்.மேலும்
-
நிமிடத்துக்கு 16 முறை கண்களை சிமிட்டணும்!
-
அரசு பள்ளி மாணவனும் ராணுவ அதிகாரி ஆகலாம் கனவை விதைக்கும் ஓய்வு பெற்ற மேஜர் கவுரவ் மிஸ்ரா
-
வாலிபருக்கு சரமாரி கத்தி குத்து கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
-
விக்கிரவாண்டி பாப்பனப்பட்டு மேம்பாலம் பணி தொய்வு சீரமத்திற்கு ஆளாகும் வாகன ஓட்டிகள்
-
தகவல் சுரங்கம் : முதல் பெண் சபாநாயகர்
-
அறிவியல் ஆயிரம் : நிலவு உருவான விதம்