தகவல் சுரங்கம் : முதல் பெண் சபாநாயகர்
தகவல் சுரங்கம்
முதல் பெண் சபாநாயகர்
இந்தியாவில் சட்டசபை முதல் பெண் சபாநாயகராக பதவி வகித்தவர் ஷானோ தேவி. காங்., கட்சியை சேர்ந்த இவர் 1966 டிச. 6 - 1967 மார்ச் 17ல் ஹரியானா சட்டசபை சபாநாயகராக பணியாற்றினார். 1962 மார்ச் 19 - 1966 அக். 31 வரை பஞ்சாப் சட்டசபையில் துணை சபாநாயகராக பதவி வகித்தார். இவர் 1901 ஜூன் 1ல் முல்தானில் (தற்போது பாக்.,) பிறந்தார். இந்தியா - பாக்., பிரிவினையின் போது பஞ்சாபில் குடிபெயர்ந்தார். 1951, 1962 என இருமுறை பஞ்சாப் சட்டசபைக்கு எம்.எல்.ஏ., வாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் தற்போது உத்தரகண்ட், ஒடிசாவில் பெண் சபாநாயகர் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement