ஐசிஐசிஐயின் 10% பங்குகள் எல்ஐசி வாங்க அனுமதி
புதுடில்லி: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் அதிகபட்சமாக 9.99 சதவீத பங்குகளை வாங்குவதற்கு, பொது த்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,க்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பங்கு சந்தையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 'ரிசர்வ் வங்கியின் அனுமதியின்படி, அடுத்த ஓராண்டுக்குள் 9.99 சதவீத பங்குகளை எல்.ஐ.சி., நிறுவனம் வாங்க வேண்டும். காலக்கெடுவை தவறவிட்டால் இந்த அனுமதி ரத்தாகிவிடும்.
மேலும், பங்குகளை வாங்கும் இந்த நடவடிக்கை ஆர்.பி.ஐ., விதிமுறைகளுக்கு முழுமையாக உட்பட்டதாகும்' என தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement