சென்னையின் 2வது புதிய விமான நிலையத்திற்கு 2 இடங்கள் தேர்வு
சென்னை: சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்காகத் தமிழக அரசு இரண்டு இடங்களைத் தேர்வு செய்துள்ளது; மேலும், இது குறித்து சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கோரியுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை, 2025ல் த.வெ.க., தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதனால் தற்போது விஜய் முதல்வரானதும், பரந்துார் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாற்று இடங்களைத் தேடப்போவதாக முதல்வர் விஜய் அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டிக்கு அருகிலுள்ள மனல்லூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்யுமாறு மாநில அரசு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு இடங்களும் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ள இடங்களாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இந்த இரண்டு இடங்களில் எங்கேயாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கும் பணியை தவெக அரசு கையில் எடுத்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் தனது சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் பரிந்துரைகளை வழங்கிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.
தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் குழு ஒன்று ஏற்கனவே இந்த இரண்டு இடங்களிலும் முதல் கட்ட ஆய்வுகளை நிறைவு செய்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. செய்யூர் இடம் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும், கல்பாக்கத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும் உள்ளது. இது மீனம்பாக்கத்தில் உள்ள தற்போதைய விமான நிலையத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது.
மனல்லூர் இடம் நகரத்திலிருந்து 50 கி.மீ தொலைவிலும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் இந்த இரண்டு இடங்களில் ஒன்றை பரிந்துரைத்தாலும், அந்த இடங்களின் அமைவிடத்தைக் கருத்தில் கொண்டு, பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து மீதமுள்ள அனுமதிகளைப் பெறுவதில் சில சிக்கல்கள் இருக்கலாம் என தெரிகிறது.
செய்யூர் பகுதிக்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன; ஆனால் அப்பகுதியின் வான்வெளி தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி தேவைப்படும். அதேசமயம் மனல்லூர் இடத்தில் சில சவால்கள் உள்ளன. அடுத்த கட்டமாக, இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு ஒன்று அந்த இரண்டு இடங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும்; அதன் பிறகு அறிக்கை தயாரிக்கப்படும். இந்த அறிக்கை சில மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (33)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06 செப்,2026 - 13:00 Report Abuse
புதிய விமான நிலையம் அமைக்க இவ்வளவு ஆர்வம் காட்டும் அரசு, ஏன் விவசாயிகள் விளைவித்த நெல் போன்ற விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை மழை, வெய்யில் போன்ற இயற்கை சீற்றத்திலிருந்து காப்பாற்ற கட்ட அதே அளவு ஆர்வம் காட்டுவதில்லை?
விமான நிலையம் அமைந்தால் ஒரு சில வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் பயன். கோடௌன் அமைந்தால் ஒட்டுமொத்த மனித இனத்துக்கே பயன். எப்படி? சாப்பாடு.
விமான நிலையத்தில் நாளை விற்கப்படும் சாப்பாடு கூட விவசாயிகள் விளைவித்ததே. கவனம் இருக்கட்டும். 0
0
Reply
Gnanam - Vellore,இந்தியா
06 செப்,2026 - 12:53 Report Abuse
Parandur தாம்பரம் evlo தொலைவு..inga விமானப்படை தலை idadhaa...parandril atleast சரக்கு முனையம் அமைக்கலாம்...மீனம்பாக்கத்தில் எடுத்து விட்டு 0
0
Reply
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
06 செப்,2026 - 12:45 Report Abuse
உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாதூ.
மற்ற மாவட்டங்களில் வளர்ச்சி மிக அத்தியாவசியமான ஒன்று.
ஆகவே மற்ற மாவட்டங்களில் விமான நிலையங்கள் மேம்படுத்த வேண்டும்.
அப்போது தான் சென்னை மீதான பல விதமான அழுத்தம் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.பல்லாவரத்தில் உள்ள இராணுவ பயிற்சி நிலையம் விமான நிலையத்திற்கு எடுத்து கொள்ள பட வேண்டும்.
இராணுவ பயிற்சிக்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் இடம் தர பட வேண்டும். இதனால் தற்போது உள்ள சென்னை விமான நிலையம் அடுத்த ஐம்பது வருடங்கள் சூப்பராக செயல் பட முடியும். இராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களும் வளர்ச்சி பெறும் 0
0
Reply
gopalkrishnan - ,
06 செப்,2026 - 12:37 Report Abuse
இவர்களுடைய செய்கையை பார்த்தால் சென்னை விமான நிலையத்தைக் விழுப்புரம் இல்லை வேலூருக்கே கொண்டு போய்விடுவார்கள் போலிருக்கு. இந்த முறையற்ற செய்கைக்கு இப்போது உள்ள விமான நிலையத்தை முடிந்தவரை விரிவு படுத்தி விட்டு தனியாரிடம் கொடுத்து விடலாம். அவர்கள் அமர்க்களமாக நடத்துவார்கள் 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
06 செப்,2026 - 12:30 Report Abuse
2வது புதிய விமான நிலையத்திற்கு செல்வதற்கே வெளியூர் செல்வதுபோல் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டுமா..? 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
06 செப்,2026 - 12:28 Report Abuse
கும்மிடிப்பூண்டியிலே விமானநிலையம் வந்தால் ஆந்திர மாநிலத்தின் தெற்குப் பகுதி மிக விரைவாக முன்னேறும். அங்கு பல தொழிற்ச்சாலைகள் வந்து முதலீடு செய்வார்கள். கும்மிடிப்பூண்டி வரை நமது மெட்ரோ ரயில் இருந்தாலும் தமிழகத்தைச் சார்ந்த அனைவரும் சென்னையை சுற்றித் தான் வர வேண்டும்.
கிளாம்பாக்கத்தால் வடசென்னை காரர்களுக்கு வேதனை உருவானது போல, தமிழகத்தில் வடசென்னை, திருவள்ளூர் மாவட்ட வாசிகள் தவிர வேறு யாருக்குமே பயனில்லை. அல்லாட்டம், பண விரயம், கால விரயம், அலைச்சல், மனஉளைச்சல், டிராபிக் ஜாம் தவிர வேறு இல்லை. சிலவு இன்னும் அதிகமாகும். போல ஏற்கனவே அங்கு திருப்பதியில் ரேணிகுண்டாவில் விமானநிலையம் உள்ளது.
அதனால் கும்மிடிபூண்டி விமானநிளையத்தால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. எல்லாம் மனவாடுவுக்கே பலன். செய்யூரிலே விமான நிலையம் வருவதால் சென்னையில் நெரிசல் குறையும். விவசாய பூமியாக இருந்த இடம் வியாபார பூமியாக மாறும். சென்னைக்கு வந்து செல்ல வசதியை உருவாக்க வேண்டும்.
வடதமிழகம் பயன்பெறும். செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.
விரைவில் தங்கள் ஊர் சென்று சேரலாம். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட காரர்களுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். அதிலும் வடசென்னை காரர்களுக்கு மட்டும் கட்டாயம் கஷ்டமாக இருக்கும். அதனால் எனது தேர்வு செய்யூர் தான். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
06 செப்,2026 - 12:03 Report Abuse
எந்த அளவு ஆந்திராவிற்கு அருகில் விமான நிலையம் அமைகிறதோ, நாயுடு அவர்கள் அதை பயன்படுத்தி கொள்ளும் திறமை மிக்கவர்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நேர்மையிலோ, திறமையிலோ எள் அளவுக்கும் அவர் முன் நிற்க முடியாது. 0
0
Reply
Vasan - ,இந்தியா
06 செப்,2026 - 12:02 Report Abuse
Cargo to be shifted to a new location, which can be away from city, and the existing space to be utilised for passenger airport 0
0
Reply
rajasekaran - neyveli,இந்தியா
06 செப்,2026 - 11:22 Report Abuse
இப்போது இருக்கிற விமான நிலையத்தேயே விரிவு படுத்தினாலே போதும். இந்த விமான நிலையம் கட்டுவதற்கு பல பல கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறோம். புதிய விமான நிலையம் கட்டுவதற்கு பதிலாக அந்த பணத்தில் கால் வாசி பணத்தை நிலம் எடுக்க செலவு செய்தலே போதும். 0
0
Reply
Venkateswaran V - Periyakulam,இந்தியா
06 செப்,2026 - 11:07 Report Abuse
ஜாக்பாட் அரசியல்வாதிகளுக்கு . இம்முறை தவெகவிற்கு அல்லது திமுகவிற்கு இழந்ததை. மீட்பதற்கு ஒரு வாய்ப்பு அதிமுக ஆட்டத்திற்கு வெளியே இருக்கும் . 0
0
Reply
மேலும் 23 கருத்துக்கள்...
மேலும்
-
இன்றைய நிகழ்ச்சி
-
குளறுபடிகளுக்கு இடம் தராமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்
-
டில்லி மெட்ரோவில் பயணம்; பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ வைரல்
-
சென்னையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்; இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை
-
இன்றைய நிகழ்ச்சி
-
தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன; சர்வர் முடங்கியதால் பயணிகள் அவதி
Advertisement
Advertisement