டில்லி மெட்ரோவில் பயணம்; பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ வைரல்
புதுடில்லி: டில்லி மெட்ரோவில் சக பயணிகளுடன் பயணம் செய்த வீடியோவை பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
டில்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று (செப் 05) மாலை பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். சாதாரண பயணிகளுடன் ரயிலில் பயணித்த அவர், பொதுமக்களுடனும் குழந்தைகளுடனும் அன்பாக உரையாடினார்.
இந்த வீடியோவை மெட்ரோ பயண அனுபவங்கள் என பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் மெட்ரோ பயணத்தின்போது நிகழ்ந்த உரையாடல்கள் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டையும், வரவேற்றையும் பெற்று வருகிறது.
@block_G@
மெட்ரோவில், பிரதமர் மோடி, பயணிகளுடன் கலந்துரையாடும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:
மெட்ரோ பயணத்திலேயே மிகச் சிறந்தது எது? பிரதமர் மோடியுடன் எதிர்பாராத விதமாக உரையாடும் வாய்ப்பு கிடைப்பது தான். சாதாரணப் பயணம்; ஆனால், ஒரு சிறப்பான நினைவாக அமைந்துவிட்டது. இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
block_G
பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
அங்க ஹாஸ்டல் கட்டிடம் இடிந்து விபத்து, மிக்க சோகம் துக்கம், இவரு ஜாலியா ஊரை சுத்தறார்
ஏழை மக்களையும் திரும்பி பார்க்க வேண்டும்