சென்னையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்; இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை

2

சென்னை: அதிமுக மாசெக்கள் கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

'அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில், சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று (செப் 06) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. பல மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில் அதிமுக செயற்குழு, பொது குழு நடத்துவது, கட்சி வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்தும், அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது, இளைஞர்களை ஈர்ப்பது எப்படி என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; ஆலோசனை நடத்தியது என்ன என்பது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement