உள்ளாட்சி தனி அலுவலர்கள் பதவி நீட்டிப்பு?
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த், நேற்று சட்டசபையில் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறப் பட்டுள்ளதாவது:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி தவிர 28 மாவட்டங்களில் உள்ள, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம், கடந்த 2025 ஜன.,5 தேதி முடிவடைந்தது.
வார்டு எல்லை மறுவரையறை, இட ஒதுக்கீடு பணிகள் நிறைவு பெறாததால், தேர்தல் நடத்தப் படவில்லை.
எனவே, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது வரை, மறுவரையறை பணிகள் முடியவில்லை.
எனவே, தனி அலுவலர்களின் பதவி காலத்தை, வரும் அக்., 19ம் தேதி வரையிலோ, தேர்தலுக்கு பின், உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் வரையிலோ நீட்டிக்க, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாகன செலவுக்கு... இதுபோல் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்த சட்ட மசோதாவில், 'முதல்வர் விஜய், கடந்த 19ம் தேதியன்று, 'ஒவ்வொரு எம்.எல்.ஏ., வுக்கும் வாகனம், மாத வாகனப்படி 75,000 ரூபாய், தனி உதவியாளர் படி 25,000 ரூபாய் வழங்கப்படும்' என, அறிவித்தார்.
இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 43 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 385 ரூபாய் செலவாகும். இதற்காக, '1951ம் ஆண்டு சம்பளம் வழங்கல் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது' என, கூறப்பட்டுள்ளது.
@block_B@ வாகனம் வழங்க சட்ட மசோதா வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்த சட்ட மசோதாவில், 'முதல்வர் விஜய், கடந்த 19ம் தேதியன்று, 'ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் வாகனம், மாத வாகனப்படி 75,000 ரூபாய், தனி உதவியாளர் படி 25,000 ரூபாய் வழங்கப்படும்' என, அறிவித்தார். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 43 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 385 ரூபாய் செலவாகும். இதற்காக, 1951ம் ஆண்டு சம்பளம் வழங்கல் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது' என, கூறப்பட்டுள்ளது. ***block_B