மருத்துவக் கல்லுாரி டீன் பொறுப்பேற்பு
ராமநாதபுரம்: தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் புதிய டீன்களை நியமித்து சுகாதாரத்துறை செயலாளர் தாரேஷ் அகமது சமீபத்தில் உத்தரவிட்டார்.
அதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் அமுதாராணி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாற்றப்பட்டார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில் நோய்க்குறியியல் துறையின் தலைவராக பணிபுரிந்த ஜி.செல்வாம்பிகை பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டார். அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் நேற்று அவர் பொறுப்பேற்றார்.
மருத்துவக் கல்லுாரி அலுவலர்கள், மருத்துவத்துறை பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement