மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும், வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஓட்டெடுப்பின் போது, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், த.வெ.க., அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இது, அ.தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னையாக உருவெடுத்தது.
இந்தச் சூழலில், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற மதுராந்தகம் - மரகதம் குமரவேல், தாராபுரம் - சத்யபாமா, பெருந்துறை - ஜெயகுமார், அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா, விராலிமலை - சி.விஜயபாஸ்கர், கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்தனர். இதையடுத்து, அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாரா புரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கும், அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மதுராந்தகம் தொகுதியில் கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தலில், மரகதம் குமரவேல் 69,284 ஓட்டுகள்; தாராபுரம் தொகுதியில் சத்யபாமா 81,100 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருந்தனர்.
தற்போது, இந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது; 16ம் தேதி மனு தாக்கல் முடிகிறது. ஓட்டுப்பதிவு, அக்., 6ம் தேதி நடக்கிறது; ஓட்டு எண்ணிக்கை, அக்., 9ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அம்மாநில சட்டசபை தேர்தலில், தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து, தட்டாஞ்சாவடி
தொடர்ச்சி 5ம் பக்கம்
மதுராந்தகம், தாராபுரம்...
முதல் பக்கத் தொடர்ச்சி
தொகுதியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலும் அக்., 6ம் தேதி நடக்கிறது.
மேலும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, நந்திகிராமம் மற்றும் பவானிபூர் என, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்த பவானிபூர் தொகுதியை தக்க வைத்து, நந்திகிராமம் தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். அதேபோல, ரெஜிநகர் தொகுதியை ஹுமாயூன் கபீர் ராஜினாமா செய்தார். இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அசாம் மாநிலத்தில் காலியாக உள்ள நாகோன் லோக்சபா தொகுதிக்கும், அக்., 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., - எம்.பி., பிரத்யுத் போர்டோலாய், தன் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்தார். இதை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒட்டு மொத்தமாக, நாட்டில் ஐந்து சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
@block_B@ தேர்தல் அட்டவணை வேட்புமனு தாக்கல் தொடக்கம் 9.9.2026 கடைசி நாள் 16.9.2026 வேட்புமனு பரிசீலனை 17.9.2026 வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் 19.9.2026 ஓட்டுப்பதிவு நாள் 6.10.2026 ஓட்டு எண்ணிக்கை 9.10.2026block_B
@block_B@ ஐந்து தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்? திருச்சி கிழக்கு - விஜய், விராலிமலை - சி.விஜயபாஸ்கர், கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா, பெருந்துறை - ஜெயகுமார் ஆகிய ஐந்து தொகுதிகளும் காலியாக உள்ளன. ஆனால், இந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகையால், இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதை, தேர்தல் கமிஷனும் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் காரணமாக, இந்த ஐந்து தொகுதி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.block_B