அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ.59 லட்சம் வர்த்தகம்

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று 59 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு திருக்கோவிலுார் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தென்பெண்ணையாறு பாசன விவசாயிகள் அதிக அளவு விளை பொருட்களை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர்.

நேற்று வேர்க்கடலை 80 மூட்டை, எள் 7 மூட்டை, நெல் 1005 மூட்டை, மக்காச்சோளம் 620 மூட்டை, கம்பு 510 மூட்டை என மொத்தம் 2,233 மூட்டை, அதாவது 196.34 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சராசரி வேர்க்கடலை மூட்டை ஒன்று 9,919 ரூபாய், எள் 11,798 ரூபாய், மக்காச்சோளம் 2,625 ரூபாய்க்கும் விற்பனையானது. இதன் மூலம் 59 லட்சத்து 366 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement