வாட்ஸ் ஆப் குழுவில் கொடிகட்டி பறக்கும் சூதாட்டம்

பல குடும்பங்களை சீரழித்து வந்த சூதாட்டத்தை அரசு தடை செய்துள்ளது. ஆனாலும், மாவட்டத்தில் ஆங்காங்கே ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் இலைமறைவு காயாக நடைபெற்று வந்த சூதாட்டம், தற்போது மீண்டும் பூதாகரமாகி வருகிறது.

குறிப்பாக, கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை, கருவேலங்காடுகள், ரயில்வே பாதை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளை தேர்வு செய்கின்றனர்.

வாரவிடுமுறை நாட்களில், இரவு நேரங்களில் சூதாடும் இளைஞர்கள், தனி வாட்ஸ் ஆப் குழு அமைத்து, எந்த இடத்திற்கு, எத்தனை மணிக்கு சூதாட வர வேண்டும் என, தகவல் அனுப்பி விடுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து குழுவில் உள்ள இளைஞர்கள், வாட்ஸ் ஆப் குழுவில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று, ஆயிரக்கணக்கில் பணம் வைத்து சூதாடுகின்றனர். அப்பகுதியில் யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்தால், தொடர்ந்து அங்கே விளையாடுகின்றனர்.

ஆனால் பொதுமக்கள் யாராவது, ஏன் இங்கு விளையாடுகிறீர்கள் எனக்கேட்டால், உடனடியாக அந்த இடத்தை காலி செய்து, மாற்று இடத்திற்கு சென்று சூதாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கிராமங்களில் அதிகரித்து வரும் சூதாட்டத்தை தடுக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement