அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்:தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தர பாண்டியன் தலைமையில், தலைமை தபால் நிலையம்
முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தில், ஓய்வூதியர் அனைவருக்கும், செலவு இல்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டும், காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல், செயலாளர் சக்திவேல், பொருளாளர் மோகன் குமார், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கோபால், சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், சக்திவேல், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம் உள்பட, பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானுக்கு உதவி செய்த 27 விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை
-
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் இருமடங்கு உயர்வு; ராஜ்நாத் சிங் பெருமிதம்
-
மேற்காசியாவில் தொடரும் பதற்றம்; ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
-
துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
-
வீட்டின் பூட்டை உடைத்து ரு. 20 ஆயிரம் திருட்டு
-
தேவேந்திர சேனா கல்சுரல் பவுண்டேசன் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement