கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் இருமடங்கு உயர்வு; ராஜ்நாத் சிங் பெருமிதம்

1

கொழும்பு: கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் இருமடங்கு அதிகரித்துள்ளதாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக சென்றுள்ள அவர் நேற்று கொழும்புவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது; இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, அது சீராக வலுவடைந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. தற்போதைய ஜிடிபி வளர்ச்சி விகிதம் சுமார் 7.8 சதவீதமாக உள்ளது. இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாகவும், உலகளாவிய வளர்ச்சியில் 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் முக்கிய நாடாகவும் திகழ்கிறது.

பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் கடந்த 12 ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் 4.7 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் 10 முதல் 11 சதவீதம் வரை இருந்தது, இவ்வாறு கூறினார்.

Advertisement