‘தினமலர்– பட்டம்’ இதழை மாணவர் படித்தால் கலெக்டரை போல் உயர்ந்த பதவிகள் பெறலாம் மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன்
தினமலர் நாளிதழ் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி சேவைகளை வழங்கி வருகிறது. அதில் தற்போது பட்டம் இதழ் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது என மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன் பேசினார்
தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளியில் நடந்த பட்டம் வினாடி வினா போட்டி நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மணிமாறன் பேசியதாவது:
‘தினமலர்- பட்டம்’ வினாடி வினா போட்டியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நிர்வாக பணிகளுக்கு இடையே மாவட்ட ஆட்சியர் நம் பள்ளிக்கு நேரில் வந்துள்ளார். அவரை போல மாணவர்களாகிய நீங்களும் உயர்ந்த நிலையை அடைந்து பொது மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் உங்களுடன் உரையாற்ற உள்ளார்.
மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட கல்வி அலுவலரை போல் நீங்கள் உயர வேண்டுமானால் உங்களது பொது அறிவும், அறிவியல் சார்ந்த அறிவும் நீங்கள் பெற வேண்டும். ‘தினமலர்– பட்டம்’ இதழ் பல அறிய மற்றும் புதிய தகவல்களை மாணவர்களுக்கு வழங்கி வகிறது. மாணவர்களின் பாட அறிவுடன் பொது அறிவு மற்றும் பல்வேறு அறிவியல் சார்ந்த தகவல்களை பட்டம் இதழில் இடம்பெற்று உள்ளதால் தான் அதனை மாணவர்களாகிய நீங்கள் படிக்க ஆசிரியர்கள் உங்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
‘தினமலர்– பட்டம்’ இதழ் மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. தினமலர் நாளிதழ் நம் பள்ளி துவங்கிய காலத்திற்கு முன்பே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜெயித்து காட்டுவோம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு சேவை ஆற்றி வருகிறது. தொடர்ந்து இன்று வரை மாணவர்களுக்கு பல்வேறு கல்வி சேவைகளை வழங்கி வருகிறது. அதில் தற்போது பட்டம் இதழ் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் ‘தினமலர் –பட்டம்’ இதழை கவனத்துடன் உள்வாங்கி படித்தால் மாவட்ட ஆட்சியரை போல நீங்களும் உயர்ந்த பதவிகளை பெறமுடியும்.