ஹீரோ மோட்டார்ஸ் ஐபிஓ பங்கு விலை அறிவிப்பு

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு நெருங்கி வரும் நிலையில், அதன் பங்குகளுக்கான விலை வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வரும் 'ஹீரோ மோட்டார்ஸ்' நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வெளியீடு, வரும் செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 18ம் தேதி முடிவடைய உள்ளது.

மொத்தம் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இதன் பங்கு வெளியீட்டுக்கு, ஒரு பங்கின் விலை வரம்பு 79 - 84 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வெளியாகின்றன.

ஓ.எப்.எஸ்., முறையில் புரமோட்டர்கள் 400 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்கின்றனர். செப்டம்பர் 23ம் தேதி ஹீரோ மோட்டார்ஸ் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement