முதியவர் பலி ஒருவர் காயம்

திருவாடானை: சிவகங்கை மாவட்டம் புளியடிதம்பத்தை சேர்ந்தவர் சேகர் 61. இவர் இளையான்குடி அருகே பகைவரை வென்றான் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி 45, என்பவருடன் வேளாங்கண்ணிக்கு டூவீலரில் சென்றார். அங்கிருந்து திரும்பி ஓரியூர் சர்ச் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு இருவரும் திரும்பினர்.

இரவு 11:00 மணிக்கு திருவாடானை அருகே கோவிந்தமங்கலம் பாலம் அருகே டூவீலரை ஆரோக்கியசாமி ஓட்டினார். சேகர் பின்னால் அமர்ந்திருந்தார். பாலம் அருகே வளைவு தெரியாமல் ரோட்டோர பள்ளத்தில் டூவீலர் பாய்ந்தது. இதில் சேகர் பலியானார். ஆரோக்கியசாமி காயமடைந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர். 

––

Advertisement