பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் ரூ.1,200 கோடியில் கட்ட அரசாணை வெளியீடு
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில், 1,200 கோடி ரூபாய் செலவில், புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலகம் கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ராஜாஜி சாலை யில் உள்ள கோட்டை வளாகத்தில், சட்டசபை மற்றும் தலைமை செயலகம், 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. த.வெ.க., அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளை சந்திக்க வருபவர்களால், கோட்டை வளாகத்தில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, முதல் கட்டமாக, முதல்வர் அலுவலகத்தை, அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10வது தளத்திற்கு மாற்றும் பணிகள் துவங்கிஉள்ளன. இதற்காக, 6.15 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடக்கின்றன.
அதேநேரத்தில், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான இடம் தேர்வும் நடந்தது. கோயம்பேடு பழைய பஸ் நிலையம், கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், பட்டினப்பாக்கம் ஆகிய, மூன்று இடங்கள் அரசின் பரிசீலனையில் இருந்தன.
இந்நிலையில், 20 லட்சம் சதுரடி பரப்பளவில், 1,200 கோடி ரூபாய் செலவில், சட்டசபை மற்றும் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என, சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். எந்த இடம் என்பது
தொடர்ச்சி 5ம் பக்கம்
முன்பு ஒன்று ஹாஸ்பிடல் ஆச்சு, இன்னொன்று லைப்ரரி ஆச்சு,, இப்போ இது
மூன்றாவது ,,, கழக,, பணம் என்ன ஆகபோகுதோ
பட்டினப்பாக்கம் கடல் அருகே உள்ளது. எனவே, தலைமை செயலகத்தை, கடலுக்கு 10 km தள்ளி, ஏதாவது metro station அருகே அமைத்தால், அனைவருக்கும் நல்லது. ஆனால், புதிய த.செ. தற்போது கட்டுவது அவசியம்தானா?