முகப்பதிவு மூலம் வருகைப்பதிவு டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமல்
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில், 165 சில்லரை விற்பனை டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு, 180 மேற்பார்வையாளர் உள்பட, 1,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். மதுபாட்டில்களை, 'ஸ்கேன்' செய்து விற்க, நவீன தானியங்கி கருவி வழங்கப்பட்-டுள்ளது. தொடர்ந்து நேற்று முதல், கடையில் பணிபுரியும் ஊழி-யர்கள், ஆன்லைன் செயலியில் முகப்பதிவு செய்து, தினமும் வருகைப்பதிவு செய்யும் நடைமுறை
அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், 'முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் முகப்பதிவு மூலம் வருகை பதிவு செய்யும் முறை நடை
முறைப்படுத்தப்பட்டுள்ளது. கடைக்கு தேவையான சரக்கு கேட்பு பட்டியல், தானியங்கி முறையில் 'அப்டேட்' ஆகிவிடும். கடை பணியாளர்கள், அலுவலகம் வர வேண்டியதில்லை' என்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement