கடந்த மாதத்தில் சாலை விதிமீறல் 35 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

சேலம்: சேலம் போக்குவரத்து துறை கட்டுப்பாடில், சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்துார், சங்ககிரி, மேட்டூர், தர்மபுரி என, 7 வட்டார போக்குவரத்து அலுவலகம், ஓமலுார், வாழப்பாடி, பாலக்கோடு, அரூர் என, 4 பகுதி நேர அலுவலகம் செயல்படு-கின்றன. அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலை-மையில் குழுவினர், கடந்த ஆகஸ்டில் வாகன தணிக்கையில் ஈடு-பட்டனர்.


அதில், 1,681 வாகனங்கள், சாலை விதிகளை மீறியது கண்டுபி-டித்து, 59.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 19.51 லட்சம் ரூபாய் உடனே வசூலிக்கப்பட்டன. அத்துடன், 35 பேரின் ஓட்டுனர் உரிமமும் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் அதிக பயணியரை ஏற்றிய, 107 வாகனங்கள், அதிக பாரம் ஏற்றிய, 74 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்-ளது.ஹெல்மெட் அணியாதவர் - 284, சீட் பெல்ட் அணியாதவர் - 181, மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டியவர் - 101, போதையில் ஓட்டியவர் - 3, ஓட்டுனர் உரிமம் இல்லாதவர் - 243, அதி
வேகத்தில் ஓட்டியவர் - 199 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்-பட்டுள்ளது. தகுதிச்சான்று(எப்.சி.,), அனுமதி சீட்டு(பர்மிட்) இல்லாத, 179 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. தவிர சாலை, வாகன வரி என, 19.94 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்-டுள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement