கேமராவை மறைத்து ஆலையில் புகுந்து முகமூடி திருடர்கள் பணம் பறிப்பு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டியில் மூலக்குறைகாடு பகுதிக்கு செல்லும் வழியில், தனியார் சேகோ ஆலை உள்ளது. அங்கு வட-மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிகின்றனர். நேற்று முன்-தினம் இரவு தொழிலாளர்கள், அறை வெளியே துாங்கிக்கொண்டி-ருந்தனர்.


நள்ளிரவில், முகமூடி அணிந்த இருவர், ஆலையில் புகுந்து அங்கிருந்த கேமராவை துணி போட்டு மூடினர். பின் அறைக்குள் புகுந்து தேடிக்கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு தொழிலாளர்கள் எழுந்துள்ளனர்.அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து தொழிலா-ளர்கள் சத்தமிட, மர்ம நபர்கள், சுற்றுச்சுவர் மீது ஏறி, குடியிருப்பு பகுதிக்குள் குதித்து தப்பிவிட்டனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 'கடந்த மாதம் இரவில் முகத்தை மூடியபடி வந்த இருவர், தலையணை அடியில் வைத்திருந்த, 2 பேரின் மொபைல் போன்களை திருடிச்சென்-றனர். தற்போது மீண்டும் வந்து மிரட்டி பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து பனமரத்துப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளோம்' என்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement