மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளிக்கு ரூ.5.80 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐ.இ.எல்.சி., மான்ஸ் மனவ-ளர்ச்சி குன்றியோருக்கான பள்ளிக்கு, சமூக பொறுப்பு நிதியில், 5.80 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்-டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐ.இ.எல்.சி., மான்ஸ் மனவ-ளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்-ளியில் 120 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 96 மாணவ, மாணவியர், விடுதியில் தங்கி படிக்கின்றனர். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் இப்பள்ளி கள ஆய்வின் போது, விடுதி மாணவர்க-ளுக்கு கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் மற்றும் பெட்ஷீட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருமாறு, பள்-ளியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. முதற்கட்டமாக ஓசூர் பட்டாசு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், இப்பள்ளிக்கு 2.75 லட்சம் ரூபாய் மதிப்பில், 60 கட்டில்கள் மற்றும் 50 மெத்தைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று, 2ம் கட்டமாக இப்பள்ளி விடுதி மாணவர்க-ளுக்கு, சமூக பொறுப்பு நிதியில், 5.80 லட்சம் ரூபாய் மதிப்பில், 50 கட்டில்கள், 80 மெத்தைகள், 80 தலையணைகள், 80 பெட்ஷீட் உள்ளிட்டவற்றை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார். பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் சோலார் பேனல் வசதி அமைத்துத்தர, வைக்கப்பட்ட கோரிக்கைகளை விரைவில் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் இமானுவேல் ராஜசே-கரன், பள்ளி தாளாளர் சாந்தகுமார், ஓசூர் பட்டாசு விற்பனை-யாளர் சங்கத்தலைவர் கண்ணன், பள்ளி தலைமையாசிரியர் செல்-வாநந்தி, பர்கூர் தாசில்தார் சக்தி மற்றும் ஆசிரியர்கள், மாண-வர்கள் கலந்து கொண்டனர்.