கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் தொடர் மின்வெட்டால் அவதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் கடந்த, 10 நாட்களாக அதிகரித்து வரும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.


கிருஷ்ணகிரி நகர் மற்றும் அதையொட்டிய கிட்டம்பட்டி, அம்மன் நகர், மேலேரிகொட்டாய், ஆவின் நகர், செட்டியம்-பட்டி, ஆர்.பூசாரிபட்டி சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வரு-கிறது. நாள் ஒன்றுக்கு, 2 மணி நேரம் முதல், 3 மணி நேர மின்-வெட்டால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.நகரையொட்டிய பகுதிகளில் மருத்துவமனைகள் அதிகளவில் உள்ளன. அவற்றில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளின் குடும்-பத்தினரும், தங்கி உள்ளனர். அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் நோயாளிகளும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இரவு நேரங்களில் பல மணிநேரம் தொடர் மின்வெட்டால் அவுதியுற்று வருவதா-கவும் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ண-கிரி மின் பகிர்மான நிலையத்தில் எந்த பிரச்னையும் இல்லை. மாநில அளவில் மின் உற்பத்தி குறைந்துள்ளதாலும், காற்றாலை மின்சார குறைபாடாலும் மட்டுமே மின்வெட்டு நிகழ்கிறது. மின் பற்றாகுறை உள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் பிரித்து அளிக்-கப்படுகிறது. இரவு நேரங்களில் மின் தேவை அதிகளவில் உள்-ளதால், சிறிதளவு தட்டுப்பாடு உள்ளது. இன்னும் சில தினங்-களில் இப்பிரச்னை தீர்க்கப்படும். கிருஷ்ணகிரி நகரில் நேற்று ஏற்-பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, மதியத்திற்கு பின், மின் வினியோகம் சீராக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement