ஆமதாபாத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்; பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஆமதாபாத்: சவுதி அரேபியா நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம், வெடிகுண்டு புரளி காரணமாக, ஆமதாபாத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தால் பயணிகள் அவதியடைந்தனர்.
107 பயணிகள், 6 ஊழியர்களுடன் இண்டிகோ விமானம், லக்னோவில் இருந்து சவுதி அரேபியாவின் தம்மாம் நகருக்கு புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ஒரு டிஷ்யூ பேப்பரில் வெடிகுண்டு என்று எழுதப்பட்டிருந்ததை, விமான ஊழியர் ஒருவர் பார்த்துள்ளார். இதை உடனடியாக விமான பைலட்டிடம் தெரிவித்தும் உள்ளார்.
இதையடுத்து, உடனடியாக ஆமதாபாத் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, பயணிகள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது.
ஆனால், சந்தேகத்திற்கிடமாக எந்தப்பொருளும் கிடைக்காததால், இது வதந்தி எனத் தெரிய வந்தது. இது தொடர்பாக விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
சொத்து, கடன் விபரங்களை தாக்கல் செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு
-
திமுகவை காப்பி அடிக்கும் அதிபர் டிரம்ப்; சலுகை அறிவிப்பு குறித்து ஸ்ரீதர் வேம்பு கருத்து
-
உலகின் மிக முக்கிய வளர்ச்சி மையமாக திகழும் இந்தியா; ஐஎம்எப் பாராட்டு
-
'எச் - 1 பி' விசா குறித்து அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு; 60 நாள் சலுகை காலம் ரத்து
-
அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்
-
விவசாயியிடம் மோதிரம் பறித்த மூவருக்கு வலை