உலகின் மிக முக்கிய வளர்ச்சி மையமாக திகழும் இந்தியா; ஐஎம்எப் பாராட்டு

3


வாஷிங்டன்: 'ஆய்வாளர்களின் கணிப்புகளை விட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியடைந்துள்ளது. உலகின் மிக முக்கிய வளர்ச்சி மையமாக இந்தியா திகழ்கிறது,' என்று சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) செய்தித்தொடர்பாளர் ஜூலி கொசாக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; இந்தியாவின் இரண்டாவது காலாண்டு ஜிடிபி 7.8% ஆக வளர்ந்துள்ளது. இது எங்கள் குழுவின் எதிர்பார்ப்புகளையும், பிற ஆய்வாளர்களின் கணிப்புகளையும் விட அதிகமாகும். இந்த எதிர்பாராத வளர்ச்சிக்கு சேவைத் துறை மற்றும் ஏற்றுமதித் துறைகளில் சிறப்பாக செயல்பட்டதே காரணமாகும். எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், இந்தியப் பொருளாதாரம் மீள்தன்மை கொண்டதாகவே இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், இந்தியா உலகிற்கான ஒரு முக்கிய வளர்ச்சி மையமாக தொடர்ந்து திகழ்கிறது என்பதை இது காட்டுகிறது.

இந்தியா போன்ற கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு, அதன் விலை உயர்வு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொரு நாட்டின் நிதிக் கட்டமைப்பைப் பொறுத்து மாறுபடும். இதன் தாக்கத்தை குறைக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, இந்தியா போன்ற சில நாடுகளில், வலுவான பொருளாதார நிலை இருந்த காலகட்டத்தில் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது, இவ்வாறு கூறினார்.

Advertisement