மகா தசல் சிறப்பு வழிபாடு
ஈரோடு:ஈரோடு சவுராஷ்டிரா சபை சார்பில், மகா தசல் சிறப்பு வழிபாடு நேற்று நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடக்கும் இந்த வழிபாட்டுக்கு சவுராஷ்டிரா சபை தலைவர் ராமர் தலைமை வகித்தார்.
செயலாளர்
சதீஷ்குமார், பொருளாளர் கோபி முன்னிலை வகித்தனர். பக்தர்கள்
பிச்சையாக பெற்ற அரிசியை பயன்படுத்தி சமையல் செய்து பெருமாளுக்கு
படையலிட்டு வழிபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ரத்த தான முகாம் நடந்தது.ஆன்மிக
பேச்சாளர் ஜகத் உத்தாரண நிதாய் தாஸ் பிரபு, கிருஷ்ணர் வாழ்க்கை வரலாறு
பற்றி பேசினார். மத்திய சவுராஷ்டிரா சபை துணை செயலாளர்
வெங்கட்ரமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement