தேசிய இறகுபந்து போட்டி குமுதா பள்ளி மாணவி தேர்வு

ஈரோடு:இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், மாநில அளவிலான மாணவியர் இறகுப்பந்து போட்டி, சிவகாசியில் நடந்தது. இதில், 60க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில், 17 வயது பிரிவில் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ மாநில அளவில் ஐந்தாமிடம் பிடித்து, தேசிய போட்டியில் தமிழக அணிக்கு விளையாட தகுதி பெற்றார். மாணவியை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, பள்ளி செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியர்கள்பாராட்டினர்.

Advertisement