மதுக்கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

திருப்பூர்,:தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்கள் 4 நாட்கள் மூடப்படுகின்றன.

கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்ட அறிக்கையில், 'தாராபுரம் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு வரும் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், உரிமம் பெற்ற பார்கள், ரெஸ்டாரண்ட் பார்கள் உள்ளிட்ட அனைத்து மது விற்பனை நிலையங்களும் இன்று (4ம் தேதி) முதல் 6ம் தேதி இரவு 12:00 மணி வரை மூடப்பட வேண்டும்.

மேலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 9ம் தேதியும் மதுக்கடைகள், பார்கள் முழுவதும் மூடப்பட்டு மது விற்பனை

தடை செய்யப்படுகிறது. உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

Advertisement