சப் இன்ஸ்பெக்டருக்கு காந்தியடிகள் காவலர் விருது

விழுப்புரம்: விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டருக்கு, காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் என்பவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜன., 26ம் தேதி குடியரசு தினத்தன்று விருது மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையாக முதல்வர் விஜய் வழங்கவுள்ளார்.

இதற்கான அறிவிப்பை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

Advertisement