இந்திய குடியுரிமை பெறாமல் வாழ்ந்து வந்த இலங்கை பெண் கைது

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே இந்திய குடியுரிமை பெறாமல் வாழ்ந்து வந்த, இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனூர் கிராமததைச் சேர்ந்த நாராயணன் மகன் ஜெயபால், 45; இவர், கடந்த 2006ம் ஆண்டு அரபு நாடான பஹிரின் நாட்டில் தங்கி வேலை செய்துள்ளார். அப்போது, அங்கு தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த அனோலியா, 45; என்பருவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு கடந்த 2010 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களின் திருமணம், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் உள்ள மகாநாட்டு மாரியம்மன் கோவிலில் முறைப்படி நடந்தது. அதன் பிறகு 16 ஆண்டு காலமாக, இந்திய குடியுரிமை பெறாமல், அனோலியா ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றினை தயார் செய்து வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார், அனோலியாவை தற்போது கைது செய்துள்ளனர். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement