திண்டுக்கல் மதுக்கடைக்கு ‘பூட்டு’

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (6-ம் தேதி) நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 9-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் 4 முதல் 6-ம் தேதி வரையும், 9-ம் தேதியும் மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டுள்ளன.

தாராபுரம் தொகுதி, திண்டுக்கல் மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், அங்குள்ள மார்க்கம்பட்டி, பூசாரிப்பட்டி, வேலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்களுக்கும் மது விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி எச்சரித்துள்ளார்.

Advertisement