தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தளர்வு

9

சென்னை: பிற மாநிலத்துக்கு திருமணமாகி சென்ற பெண்கள், அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிரசவித்தால் அவர்களுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் நிபந்தனைகளின்படி, பிரசவித்த தாயார் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என உள்ளது. இதனை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

புதிய வழிகாட்டுதலின்படி குழந்தையின் தாயார், தமிழகத்தில் பிறந்து திருமணமாகி, வெளிமாநிலம் சென்றிருந்தாலும், அவரின் பெற்றோர் தமிழகத்தில் நிரந்தரமாக வசித்தால் குழந்தைக்கு ஒரு கிராம் மோதிரம் உடன் வழங்கப்படும். தமிழகத்தில் வசிப்பதற்கான உரிய ஆதாரங்களை சம்ப்பிக்க வேண்டும்.இது ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கு பொருந்தும். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement