இந்தியா - இலங்கை கூட்டு பணி குழு கூட்டம்: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்
சென்னை: 'மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள இந்தியா - இலங்கை கூட்டு பணிக் குழுவை உரிய முறையில் புனரமைத்து, அதன் கூட்டத்தை விரைவாக கூட்ட வேண்டும்' என, முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒன்பது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், 3ம் தேதி கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மற்றும் அதை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், பாரம்பரியமாகவே பாக் ஜலசந்தி பகுதியில், மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்களின் முதன்மையான வாழ்வாதாரமாக, மீன்படி படகுகள் விளங்குகின்றன. அவை பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள இந்தியா - இலங்கை கூட்டு பணிக்குழுவை உரிய முறையில் புனரமைத்து, அதன் கூட்டத்தை விரைவாக கூட்ட வேண்டும்.
இரு நாட்டு மீனவர்களின் பிரச்னைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண வேண்டும். இலங்கையில் சிறையில் உள்ள 20 மீனவர்களையும், பறிமுதல் செய்த, 270 படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த முதல்வருக்கு எயுத படிக்க வருமா?
அய்யா ரங் இதுவரை எத்தனை தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற் படையால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர் என்ற கணக்கு தெரியுமா? எத்தனை படகுகள், எவ்வளவு மீன் பிடி வலைகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன என்பது தெரியுமா? இருவருக்கும் பொதுவான கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அனுமதிக்காததுதான் பிரச்சனைக்கு மூல காரணம் அதுவாவது தெரியுமா? விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இலங்கையின் வட பகுதி இருந்த வரை தமிழக மீனவர்கள் நிம்மதியாகத்தான் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருந்தனர். தமிழக மீனவர்கள் மாற்றுத் தொழில் செய்ய வேண்டுமா? ஏன் தொழிலை மாற்ற வேண்டும்? சேம்சைடு கோல் எதற்காக போடுகிறீர்கள் மிஸ்டர் ரங்?
பாக் நீரிணை கடற்பகுதிதான் இலங்கையின் வடபகுதி ஏழைத் தமிழ் மீனவர்களுக்கு வாழ்வாதாரமே. நம்நாட்டு ஆட்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான கிமீ கடற்கரை இருந்தும் இலங்கை நாடு மீன்களை இறக்குமதி செய்யும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளது. தீர்வாக நம்மூர் மீனவர்களுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தித்தர வேண்டும்.
வட இலங்கை தமிழ் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழக மீனவர்கள் பலர் கடலின் அடி ஆழம்வரை பிடிக்கிறார்கள்.
முதலில் நமது மீனவர்கள் நமது நாட்டு எல்லைக்குள் மீன் பிடித்தால் பிரச்சினை எழவே வாய்ப்பில்லை. அவர்கள் வேண்டுமென்றே எல்லையைத்தாண்டும்போதுதான் பிரச்சினையே வருகிறது.
அவர்கள் எல்லை தாண்டுவதும் மீன்களுக்காக மட்டுமல்ல என்பதும் உலகறிந்த ரகசியம்
கடமை முடிஞ்சாச்சு என்று கை விரிப்பது முந்தைய திருட்டு கூட்டத்தின் முதல்வர் செய்தது. முதல்வர் விஜய் அவ்வாறு செய்ய மாட்டார். மத்திய அரசுடன் இணக்கமான போக்குடன் இருக்கும் முதல்வரின் கடிதத்தை மத்திய வெளியுறவு அமைச்சரும் அலசிய படுத்த மாட்டார்.
லவ் லெட்டர் எழுதுகிறார் நடிகன்.
இதுபோல மத்திய அரசை மதித்து கடிதம் எழுதுவது ஒரு நல்லுணர்வு. மக்களுக்கு நல்லது நடந்தால் போதும் என்ற நல்மனப்பாங்கு...
யப்பா என்ன ஒரு விளக்கம்? அப்படியே உடம்பெல்லாம் புல்லரிக்குது தீயின் விளக்கத்தைப் பார்த்து!
கடிதம் எழுதியாச்சு.நம்ம கடமை முடிஞ்சு போச்சு.நாம மட்டும் என்ன இதில் முந்தைய திராவிட மாடலை தாண்டியா புதிதாக சிந்தித்து மாற்றம் தந்து விடப் போகிறோம்?
திராவிட கருநாகம் செஞ்ச வேலை அப்பிடி விஷம் இறங்க வெகு நாளாகும் நாடு விளங்க வெகு நாளாகும்
விஷப் பாம்பு கடிக்கு தான் மாற்று மருந்து கொடுத்து கடிபட்டவரை காப்பாற்றுவதாக கூறிய இந்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போலி டாக்டர் சிகிச்சை அளிக்கத் தெரியாமல் வெறும் பேச்சு பேசியே கடி பட்டவரை கொன்று விடுவார் போல?