புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்த தரண் மருத்துவமனை
சேலம்; மூளைக்கு பரவிய புற்றுநோய் மற்றும் பக்கவா-தத்தால் பாதிக்கப்பட்ட, 49 வயது பெண்ணுக்கு, வெற்றிகரமாக சிகிச்சை அளித்து, தரண் மருத்து-வமனை மருத்துவர்கள் புதிய வாழ்வு அளித்துள்-ளனர்.
சேலம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த, 49 வயது பெண் ஒருவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை பெற்று நலமுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், சமீ-பத்தில் அவருக்கு தீராத தலைவலி, தலைசுற்றல் ஏற்பட்டு, பக்கவாத பாதிப்பு உண்டானது. இதைய-டுத்து, சேலம் தரண் மருத்துவமனையின் நரம்-பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரி-ஹரசுதனை அணுகினார்.பின்னர் நடத்திய சோதனையில், மார்பக புற்று-நோயானது மூளைக்கு பரவி, அங்கு கட்டியாக மாறியிருப்பது கண்டறியப்பட்டது. பிறகு மோட்டார் மேப்பிங் என்ற அதிநவீன தொழில்-நுட்பத்தை பயன்படுத்தி, மூளையின் பிற முக்கிய நரம்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், மூளையிலிருந்த புற்றுநோய் கட்டி துல்லியமாக
அகற்றப்பட்டது.
கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரஞ்சன் சுப்பிரமணியம் வழிகாட்டுதலின்படி, உலகத்தரம் வாய்ந்த, அதிநவீன இயந்திரம் மூலம் நோயாளிக்கு எஸ்.ஆர்.எஸ்., சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம், புற்றுநோய் தாக்-கிய பகுதிக்கு மட்டும் துல்லியமாக கதிர்வீச்சு செலுத்தப்பட்டது. இதன் விளைவாக, நோயாளி பக்கவாதம், தீராத தலைவலி மற்றும் தலை-சுற்றல் உபாதைகளிலிருந்து விடுபட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து தரண் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் தரணீஷ் கூறுகையில்,''எளிய மக்களும் உயர்தர உலகத்-தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை பெற வேண்டும் என்ற நோக்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழும், இச்சேவையை வழங்கி வருகிறோம்,'' என்றார்.
மேலும்
-
பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச சதி; செர்பியா முன்னாள் அதிபர் பகீர் தகவல்
-
இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம் 5 பேர் மீட்பு: 3 பேர் மாயம்?
-
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக்கு ஐ.நா.,வில் இந்தியா கடும் கண்டனம்
-
கருங்கடலில் உக்ரைன் தாக்குதல் பற்றி எரிந்த எண்ணெய் கப்பல்
-
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவின் 3 அம்ச திட்டங்கள்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தளர்வு