வாய்க்கால் துார் வாருவது தொடர்பாக எம்.எல்.ஏ., ஆய்வு

புதுச்சேரி: உழவர்கரை, ஜெயா நகரில் பருவ மழை முன்னெச்சரிக்கையாக கழிவுநீர் வாய்க்கால் துார்வாருவது தொடர்பாக நாராயணசாமி எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

உழவர்கரை, ஜெயா நகர் வழியாக செல்லும் கழிவுநீர் வாய்க்கால் துார் வாரப்படாமல் உள்ளதால் அப்பகுதி முழுதும் துார்நற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, நாராயணசாமி எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் அப்பகுதி கழிவுநீர் செல்லும் வாய்க்காலை ஆய்வு செய்தார். அப்போது, பருவ மழைக்கு முன் வாய்க்காலை, பொதுப்பணித்துறை மூலம் துார்வார நடவடிக்கை எடுப்பதாகவும், கொசு ஒழிப்பு நடவடிக்கையாக மருந்து தெளிக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை பார்வையிட்ட எம்.எல்.ஏ., சேதமடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, உறுதியளித்தார்.

ஆய்வின்போது, என்.ஆர்.காங்., நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராகவன், சிவலிங்கம், ஜெயராஜ், காமராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement