சிமென்ட் சாலை பணி அமைச்சர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி அசோக் நகரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் சிவக்கொழுந்து துவக்கி வைத்தார்.

லாஸ்பேட்டை தொகுதி அசோக் நகர், பாரதியார் சாலை, பொதுப்பணித் துறை சார்பில், ரூ.78 லட்சம் செலவில் வடிகால் வசதியுடன் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்கான பணியினை அமைச்சர் சிவக்கொழுந்து பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார், செயற் பொறியாளர் சீனிவாசன், உதவிப் பொறியாளர் பாலாஜி, இளநிலை பொறியாளர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement