விளையாட்டு பக்கத்திற்கு...கடலுாரில் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி
கடலுார்: கடலுார் ஹேண்ட்பால் கிளப் சார்பில் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. கடலுார் ஹேண்ட்பால் கிளப் சார்பில் பெண்களுக்களுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி ‘ஓபன்’ பிரிவில் மஞ்சக்குப்பத்தில் நடந்தது. போட்டியில் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி பி.எஸ்.பாளையம் பி.பி., அணி உட்பட 9 பெண்கள் அணி பங்கேற்றன. பரிசளிப்பு விழா மஞ்சக்குப்பத்தில் நடந்தது. போட்டியில் முதலிடம் பிடித்த பி.எஸ்.பாளையம் பி.பி., அணிக்கு 3,000 ரூபாய் ரொக்கம், சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணிக்கு 2,000 ரூபாய் ரொக்கம், மூன்றாமிடம் பிடித்த திருப்பாதிரிப்புலியூர் எம்.கே. கிளப் அணிக்கு 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் வென்ற அணிகளுக்கு மாவட்ட ேஹண்ட்பால் சங்க செயலாளர் அசோகன், பொருளாளர் கார்த்திகேயன், துணை செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் பரிசு வழங்கினர். சிறந்த வீராங்கனைக்கான பரிசு பி.பி., அணி அபிநயா, சிறந்த கோல் கீப்பருக்கான பரிசு திருப்பாதிரிப்பலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அணி ஜனனிக்கு வழங்கப்பட்டதுஏற்பாடுகளை கவியரசன், கார்த்திகேயன், கார்த்தி செய்திருந்தனர். .