வள பயிற்றுநர் காலி பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட வள பயிற்றுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேளாண்மை மற்றும் கால்நடை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, 27 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள், வரும் 21ம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் அலுவலகத்தில், தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ளவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement