கடலுார் புதிய பாலத்தில் அமைச்சர் ராஜ்குமார் ஆய்வு
கடலுார்: கடலுார்–சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் ஆறு புதிய பாலத்தில் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
கடலுார் உழவர் சந்தை அருகே ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட சாலையோர பசுமை பூங்காமை, அமைச்சர் ராஜ்குமார், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கடலுார் மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைசெல்வம் உட்பட ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
பின்னர், அருகில் உள்ள புதிய பாலத்தை பார்வையிட்ட அமைச்சர் ராஜ்குமார், புதிய பாலத்தில் செய்யப்படும் போக்குவரத்து மாற்றத்தினால், பொதுமக்களுக்கு எவ்வித அசவுகரியமும் ஏற்படாமல் இருக்க வேண்டும். பண்டிகை நாட்களில் ஏற்படும் போக்குவரத்தினையும் கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போக்குவரத்து மாற்றத்தை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுருத்தினார்.
ஆய்வின்போது, கமிஷனர் கிஷன்குமார், டி.ஆர்.ஓ., சுந்தரராஜன், டி.எஸ்.பி., தமிழினியன், ஆர்.டி.ஓ., ஞானபிரகாசம், கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைகள் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.