மணிமுக்தாற்றில் கழிவுகள் கொட்டிய செப்டிக் டேங்க் வேன் பறிமுதல்
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மனித கழிவுகளை வீசிய வேனை, நகராட்சி கமிஷனர் பறிமுதல் செய்தார்.
விருத்தாசலம் நகராட்சியில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுகள் டேங்கர் வாகனங்கள் மூலம் நீர்நிலைகளிலும், மணிமுக்தாற்றிலும் கொட்டப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் பாதிப்பதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்த புகாரை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் நாகராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், துப்புரவு மேற்பார்வையாளர் கணபதி, துாய்மை பணியாளர்கள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மணிமுக்தாற்றில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டிய வாகனத்தை மடக்கிப் பிடித்து, பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கமிஷனர் நாகராஜ் அறிக்கை: நகராட்சிக்குள் இயங்கும் கழிவுநீர் அகற்றும் அனைத்து வாகன உரிமையாளர்களும் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்யாத வாகனங்கள், வரும் ஏழு நாட்களுக்குள் நகராட்சி அலுவலகத்தில் முறையாக பதிவு செய்ய வேண்டும். வாகனங்களில் எடுக்கும் கழிவுநீர், வயலுாரில் செயல்படும் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கொட்ட வேண்டும்.
மாறாக, நீர்நிலைகளிலோ அல்லது திறந்தவெளியிலோ கழிவுகளை கொட்டினால், சம்பந்தப்பட்ட வாகனங்கள் நிரந்தரமாக பறிமுதல் செய்யப்படுவதுடன், அதன் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார்.
மேலும்
-
உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி; ராகுல் அறிவிப்பு
-
போப் லியோவிற்கு உடல்நலக்குறைவு
-
சுகாதார ஆய்வாளர் காலியிடங்களை நிரப்பணும் :டெங்கு காய்ச்சல் தடுக்க
-
5 மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு!: ஐ.நா., அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி
-
தண்டவாளத்தை கடந்த யானைகள்: ரயிலை நிறுத்தி காப்பாற்றிய ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு
-
பூ வியாபாரியின் குடிசை வீட்டில் வெடித்து சிதறிய ‛காஸ்’ சிலிண்டர்: ரூ.4.50 லட்சம், 8.5 சவரன் நகை, ஆவணங்கள் தீக்கிரை