‘21,060 மரக்கன்றுகளை நட்டதற்கு ஆதாரமில்லை’

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ நிறுவனம், 21,060 மரக்கன்றுகளைநட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்பது சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பெங்களூரில் நடக்கும் மெட்ரோ பணிகளின் போது மரங்கள் வெட்டப்பட்டால், ஒரு மரத்திற்கு ஈடாக, 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பெங்களூரில் 2006ம் ஆண்டு நடந்த மெட்ரோ ரயில் பணிகளுக்காக 2,106 மரங்கள் வெட்டப்பட்டன. இந்த மரங்களுக்கு ஈடாக 21,060 மரக்கன்றுகளை மெட்ரோ ரயில் நிறுவனம் நட்டிருக்க வேண்டும்.

ஆனால், 21,060 மரக்கன்றுகள் எந்த பகுதியில் எப்போது நடப்பட்டன; அந்த மரங்கள் எத்தனை மாதங்கள் பராமரிக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் எதுவும், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் இல்லை என்பது சி.ஏ.ஜி., எனும்இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர்சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement