இருளில் மூழ்கிய கடற்கரை சாலை சுற்றுலாப் பயணிகள் அவதி

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை அழகு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மாலை மற்றும் இரவு நேரத்தில் அழகிய கடற்கரை சாலையில் நடந்து செல்வது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

இதனால் வார இறுதி நாட்களில் கடற்கரை சாலை சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். கடந்த வாரம் கடற்கரை சாலையில் மின் கம்பம் சாய்ந்து விழுந்து ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கடற்கரை சாலையில் பெரும்பாலான மின்கம்பங்கள் அகற்றப்பட்டது.

அகற்றப்பட்ட மின்கம்பத்திற்கு பதில் புதிய மின் கம்பம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் கடற்கரை சாலையில் மின்விளக்கு இன்றி பல இடங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் அச்சத்துடனே இருட்டான பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர்.

Advertisement