‘நீட்’ அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 2ம் கட்ட மாப் -அப் சுற்றுக்கு விருப்பத்தேர்வு
புதுச்சேரி: புதுச்சேரி சென்டாக்கில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு இரண்டாம் கட்ட மாப்-அப் சுற்றுக்கு விருப்பத்தேர்வு சமர்ப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்டாக்கில் இளநிலை நீட் அல்லாத படிப்புகளுக்கு இரண்டாம் கட்ட மாப்-அப் சுற்று கலந்தாய்வு நடக்கிறது. இதற்காக புதுச்சேரி அரசு ஒதுக்கீடு, சுயநிதி மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் மட்டும், பி.எஸ்.சி., வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை மருத்துவம்பி.எஸ்சி., நர்சிங், பாராமெடிக்கல், பி.பார்ம், பி.ஏ., எல்.எல்.பி., மற்றும் பாரா மெடிக்கல் டிப்ளமோ படிப்புகள், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் தங்களின் பாடப்பிரிவுகளை நாளை 12ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம். இந்த தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கும் கோரிக்கைக்கு புதிய கட்டுப்பாடுகள்! வழிகாட்டுதல்களை வெளியிட்டது தேர்தல் கமிஷன்
-
பல்கலை பேராசிரியரிடம் ரூ.2.50 லட்சம் ‘அபேஸ்’
-
நுாதன முறையில் நண்பரிடம் கார் மோசடி
-
இருளில் மூழ்கிய கடற்கரை சாலை சுற்றுலாப் பயணிகள் அவதி
-
பா.ஜ., மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
-
மணிமுக்தாற்றில் கழிவுகள் கொட்டிய செப்டிக் டேங்க் வேன் பறிமுதல்